சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும் என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கங்கள் கூறுகின்றன.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குழு உறுப்பினர் தில்கா சுராங்கனி இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார வீழ்ச்சியால் உருவாகியுள்ள சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழக் கூடிய ஊதியத்தை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பளம் கிடைக்கப் போராட வேண்டும் என்றும் தில்கா சுராங்கனி குறிப்பிட்டார்.
பொருட்களின் விலை உயர்வை பொருத்து விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு விலை சூத்திரம் இருந்தாலும், சம்பளத்திற்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்குரியது என வடமேற்கு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெட்சில பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த கொவிட் காலத்தில், பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியை குறைத்தன.
ஆனால், இதுவரை பல அமைப்புகள் குறைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சில தொழிற்சாலைகள் ஆர்டர்கள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்களை வீட்டிலேயே தங்க வைத்து பாதி ஊதியத்தை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை வீட்டிலேயே தங்க வைத்து அவர்களுக்கு ஊதியம் வழங்கும் சுமார் 100 தொழிற்சாலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.