மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்நிலையில், விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, நேற்றிரவு (08) இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.