பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இரு முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமர் குல் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், சயீத் அஜ்மல் சுழல் பந்து பயிற்சியாளராகவும் இருப்பார்கள், மேலும் அவர்கள் டிசம்பரில் தொடங்கும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து தங்கள் பணியயாவ் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதால், பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
பாகிஸ்தான் ஆடவர் தேசிய அணியின் புதிய தேர்வுக் குழுவின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், அணியின் இயக்குநராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் இருப்பார்.
மேலும் பாபர் அசாம் தனது தலைமை பதவியை இராஜினாமா செய்ததால், டி20 தலைமை பதவி ஷாஹீன் அப்ரிடிக்கும், டெஸ்ட் தலைமை ஷான் மசூத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.