ஆணாக பிறந்து பெண்களாக இருக்கும் திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
பெண் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் Danielle McGahey இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் அணியில் இடம் பெற்ற முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனை ஆனார்.
29 வயதான அவர் செப்டம்பரில் பிரேசிலுக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
இருப்பினும், ஐசிசியின் புதிய விதிமுறைகளின்படி, அவர் இனி சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது.