போட்டியின் அனைத்து சவால்களையும் தோல்வியின்றி எதிர்கொண்டு, இறுதிப் போட்டியில் கசப்பான தோல்வியை சந்திக்க நேர்ந்தது, உலகக் கிண்ணத்தில் இந்திய வீரர்களுக்கும், ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் இந்தியப் பிரதமர் தனது X கணக்கில் வைத்த குறிப்பு ஒன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் சிறந்த திறமையும், உறுதியும் தனித்து நின்றதாக கூறப்படுகிறது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து மோடி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது சிறப்பு.
மேலும் அவர்கள் சிறந்த அணியாக விளையாடி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தனது வாழ்த்துச் செய்தியின் இறுதியில், “இன்றும் நாளையும் நாங்கள் உங்களுடன் இருப்போம்” என்று இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.