தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கிச் செல்லும் இரவு தபால் புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் ரயில் ஹப்புத்தளை நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் பாதையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.