follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP2சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்த உடன்பாடு

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்த உடன்பாடு

Published on

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு – 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி...

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு...

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான்...