இலங்கை கிரிக்கெட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஐ.சி.சி விதித்த தடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று தெரிவித்த கருத்து தவறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் அது முற்றாக நிராகரிக்கப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு கடந்த 16ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.