ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை வேலைக்கு அழைக்காமல் அடிப்படை சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்கி மாதக்கணக்கில் வீட்டில் தங்கவைப்பதாக சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 16000 ரூபா எனவும், இந்த நிலையில் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு 8000 ரூபாவை வழங்குவதாகவும் சங்கத்தின் செயலாளர் அன்டனி மார்க்ஸ் தெரிவித்தார்.
இந்நிலைமை காரணமாக சில ஊழியர்கள் வேறு வேலைகளுக்குத் திரும்புவதாகவும், மீண்டும் பணிக்கு அழைக்கப்படும் போது பணிக்கு வரவில்லையென்றால், நிறுவனத் தலைவர்கள் சேவையிலிருந்து விலகியவர்களாகக் கருதி, பணம் கொடுக்காமல் நீக்குவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.