follow the truth

follow the truth

February, 3, 2025
HomeTOP2அரச ஊழியர்களின் சம்பளம் - அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும்

அரச ஊழியர்களின் சம்பளம் – அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும்

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்வாக செலவுகளுக்கு போதுமான அளவு நிதி இல்லாமை மற்றும் இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி வருமானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு பற்றாக்குறை தொடர்ந்தும் ஏற்பட்டு, நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.

துரதிஷ்டவசமாக அண்மைய வருடங்களில் இந்த சட்டங்களுக்கேற்ப செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

2024 வரவு செலவுத்திட்டம் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம், அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமான அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கிடைக்கவுள்ளது. கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயல்படுத்த போதுமான நிதி எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு, முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும்.” என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யானை – மனித மோதலுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தீர்வு

இலங்கையின் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள யானை - மனித மோதலுக்கு பல்வேறு தீர்வுகள் தேடப்பட்ட பின்னணியில் அதற்காக விஞ்ஞான...

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக லபார் தாஹிர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற...

பாதுகாப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தயார்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக...