ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிரான மனுவை பரிசீலிக்க நீதியரசர்களான டி. என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோரைக் கொண்ட புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்துக்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் குறித்த மனு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், புதிய நீதியரசர்கள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனு எதிர்வரும் 16ஆம் திகதி புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்பாக மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.