இலங்கையில் 600,000 இற்கும் அதிகமான குடும்பங்களின் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சபையின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து தெரிவித்தார்.
நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து எம்மை டிஸ்னிலேண்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாக தெரிவித்த எரான் விக்ரமரத்ன இன்று நாம் டிஸ்னிலேண்டிற்குள் வெளியில் இருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
நாட்டை வங்குரோத்து செய்ததற்கு எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என தெரிவித்த அவர், நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் இன்னும் உள்ளே இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
மூன்று வேளையும் சாப்பிட்டு வந்த வீடுகள் இன்று இரண்டு வேளைகளே சாப்பிடுவதாகவும், இன்று சோற்றுத் தட்டில் ஒரு துண்டு மீனோ கருவாடோ இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.