அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தீர்மானம் எடுக்கும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தனக்கும் அந்த பாரம்பரியம் தெரியும் எனத் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இல்லாமல் சந்தையில் மரக்கறி விலைகளை உயர்த்துவது போன்று அமைச்சரவை தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முதுகெலும்பு இருக்குமானால் அவர் இப்போது செய்ய வேண்டியது இந்த அறிக்கைகளை விடுத்து சாகாமல் பதவி விலகுவதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மேர்வின் சில்வா, பிரச்சினை ஒன்றின் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது தான் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகிவிட்டதாகவும் பசில் ராஜபக்ஷவிற்கோ அல்லது கோத்தாவிற்கோ தலைவணங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.