தென் கொரியாவில் ரோபோ தாக்கியதில் அந்நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரோபோவால் தாக்கப்பட்டார்.
40 வயதான அந்த நபர் ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபரை ரோபோ பிடித்து அவரது முகம் மற்றும் மார்பை நசுக்கியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹெப் தெரிவித்துள்ளது.
காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் இறந்தார்.
ரோபோவின் பணி மிளகு பெட்டிகளை தூக்கி தட்டுகளுக்கு மாற்றுவதாகும்.
நவம்பர் 8 ஆம் திகதி, இறந்த தொழிலாளி தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள மிளகு வரிசைப்படுத்தும் ஆலையில் பயன்படுத்துவதற்காக ரோபோவை சோதித்துக்கொண்டிருந்தார்.
அதன்படி, சோதனை ஓட்டத்திற்கு முன், அந்த ஊழியர் ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை சரிபார்த்துக்கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வகையில், மார்ச் மாதம், 50 வயது தென் கொரிய நபர், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் போது, ரோபோ மோதியதில், பலத்த காயமடைந்திருந்தார்.