follow the truth

follow the truth

December, 1, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கான புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டோர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டோர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

Published on

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று (07) சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு , கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளை அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் இந்த புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.No description available.No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேரூந்து கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட...

வாகன இறக்குமதி பற்றிய விசேட அறிவிப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்...

பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு விசேட வேலைத்திட்டம்

டிசம்பர் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை...