தனது அமைச்சில் தாம் ஆற்றிவரும் கடமைகளில் யாரும் தலையிட தான் விரும்புவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் தற்போதைய நிலைமை குறித்தும், சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரை தொலைபேசியில் 5 தடவைகள் அழைத்ததாகவும், சட்டமா அதிபர் தம்மை புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூதாட்ட ஷம்மியா அல்லது ரொஷான் ரணசிங்கவா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்த்திருந்தார்.
அன்று தாம் லங்கா பிரீமியர் தொடரில் ஜனாதிபதிக்கு பின்னால் அமர்ந்திருந்த பாதாளர்களை கண்டு மிரண்டு போயிருந்தேன், அரச தலைவர் ஒருவருக்கு பின்னால் எப்படி பாதாளா உறுப்பினர் ஒருவர் அமர்ந்திருக்கலாம்? அவ்வாறு என்றால் அரச தலைவரின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? அன்று ஜனாதிபதிக்கு பின்னால் அமர்ந்திருந்த பாதாள உறுப்பினர்கள் ஷம்மி இனது அடியார்ட்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
தன்னை தனது பொலன்னறுவை மக்கள் இங்கு அனுப்பியுள்ளமைக்கு நான் பொறுப்புடன் இருப்பேன், அன்று நான் தோல்வியுற்ற போது எனக்கு ஆறுதலாக என்ன மீண்டும் உயர்த்தியது பொலன்னறுவை மக்களே. அவர்களுக்கு என்றும் நான் நேர்மையாக இருப்பேன். தான் என்றும் தன்னை வீட்டுக்கு அனுப்பினாலும் பொலன்னறுவை மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்ய மாட்டேன். இலங்கை தாயை துஷ்பிரயோகம் செய்துள்ளனர் அது தான் உண்மை என்றும் இவற்றை எல்லாம் மாற்றுவதற்கு இந்த இலஞ்ச ஊழல் சூதாட்ட குழுவினை வீட்டு அனுப்ப அனைத்து மக்களிடமும் ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரினதும் ஒத்துழைப்பினை கோருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்