ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தாம் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள “மோசமான” பாராளுமன்றம் தற்போதைய பாராளுமன்றம் என்று கூறினார்.
“இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்தது மிகவும் புத்திசாலி மற்றும் அறிவுள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்துத்தான். நான் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன், இது நான் சந்தித்தவற்றிலேயே மோசமான பாராளுமன்றம். சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்படி பேசுவது என்று தெரியவில்லை, அவர்கள் அகங்காரமாக இருக்கிறார்கள். அவர்கள் பேசும் விதமும் நடந்துகொள்ளும் விதமும் அவர்களின் முட்டாள்தனத்தையே காட்டுகிறது” என்றார்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிவாகவும், அனைத்து மக்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.