மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் திட்டமிட்டுள்ளார்.
ஜோர்தானில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் கட்டார், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பலஸ்தீன பிரதிநிதி ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஜோர்தான் மன்னரை சந்திக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காஸா பகுதியில் மனித போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்தும் கோரிக்கையை முன்வைப்பதற்காக இஸ்ரேல் சென்ற அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அதன் பின்னரே ஜோர்தான் வந்துள்ளார்.
ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்ரேலியர்களையும் விடுவிக்கும் வரை போர் நிறுத்தத்துக்கு உடன்படப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.