பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியை (Arif Alvi) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் திகதியை தீர்மானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடிகளால் பொதுத் தேர்தல் நாளுக்கு நாள் தாமதமானது.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9ஆம் திகதி கலைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.