follow the truth

follow the truth

November, 20, 2024
HomeTOP1வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று பணிப்புறக்கணிப்பு

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று பணிப்புறக்கணிப்பு

Published on

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று (02) அமுல்படுத்தப்பட்டது.

இதன்படி, வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும், 7ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த வேலை நிறுத்த நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்பட உள்ளன.

வரிச் சுமை, வாழ்க்கைச் செலவு, சுகாதார நெருக்கடி, மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு வெங்காய விலை அதிகரிப்பு

இன்று (20) காலை நிலவரப்படி உள்நாட்டு பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 400 ரூபாவாகவும் வெளிநாட்டு...

திசைகாட்டி உறுப்பினர்கள் பெலவத்த கட்சி தலைமையகத்திற்கு

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 21ஆம்...

‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… மீடியாக்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு...