சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.