follow the truth

follow the truth

January, 13, 2025
HomeTOP1‘சிசு செரிய’ தொடர்பிலான தீர்மானம்

‘சிசு செரிய’ தொடர்பிலான தீர்மானம்

Published on

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு செரிய’ பஸ்களில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு டிப்போ அத்தியட்சகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான பயிற்சி மற்றும் அனுபவமுள்ள சாரதிகள் மற்றும் உதவி சாரதிகளை சேவையில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்த சாரதிகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் சில இளம் சாரதிகள் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்துவதை அவதானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

சீனா பயணித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச்...

கைப்பேசி பேக்கேஜ்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை

கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்கள் தமது கையடக்கத் தொலைபேசி பொதிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என...