யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுவதில் உண்மையில்லை என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களுக்கும் உரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் ஒரு பிரதேசத்திற்கு உரம் கிடைக்காத பட்சத்தில், உடனடியாக விவசாய அமைச்சுக்கு அறிவிக்குமாறும் விவசாய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு பொதுத்துறை உர நிறுவனங்களாலும் தனியார் துறையினராலும் இப் பருவத்திற்குத் தேவையான உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், உரம் கொள்வனவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபா வீதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.