எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்திருந்தார்.
பல்வேறு விலைகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் முன்வைத்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டே விவசாய அமைச்சு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.
அதன்படி உர விற்பனை தொடர்பாக முறையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பின் உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.