அடுத்த வருடத்திற்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சிற்காக செலவினை தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பொஹொட்டுவையில் உள்ள சில குழுக்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை விமர்சித்து வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம் என கூறி எப்படியாவது அமைச்சர் பட்டம் பெற்றுக்கொள்ள ஜனாதிபதியை சுவரில் சாய்க்க ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார் என அவருக்கு விசுவாசமானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தை இரண்டாம் வாசிப்பில் தோற்கடிக்காமல், வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்துடன் தொடர்புடைய எம்.பி.க்கள் குழுவொன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் பொஹட்டுவையில் தற்போதுள்ள பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.