நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒருபோதும் விவாதத்தில் ஈடுபட மாட்டார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விவாதத்தில் கலந்து கொண்டால் நாமல் ராஜபக்ச நிச்சயம் தோற்றுவிடுவார் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அமைச்சர் நிமல் லன்சாவுக்கு கஞ்சா மற்றும் ஹெரோயின் தொடர்பில் விரிவான அறிவு இருப்பதாகவும் எனவே லன்சா நிச்சயமாக நாமல் ராஜபக்சவுடன் வாக்குவாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எந்த அறிவும் இல்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.