follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP1மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுடன் புதிய சட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுடன் புதிய சட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை

Published on

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், தற்காலத்துக்கு இணக்கமான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மாறும் போது மாறாத நிலையான கொள்கைகளை ஒவ்வொரு துறையிலும் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் ஒரு கட்டமாக ஐந்தாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கை தயாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிதி ஒழுக்கம் இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முன்வருகின்றன. எனவே நாட்டில் நிதி ஒழுக்கத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பான குழு உட்பட பல்வேறு குழுக்களை நியமிக்கவும் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கத்தை கையாள்வதற்கான சட்டமூலமும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க நியமனம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை...

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

தியத்தலாவையில் ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டியில் இருந்து பதுளை...

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ

அமைச்சரரையின் ஊடக பேச்சாளராக அமைச்சர் வைத்தியர் நளிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.