அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் சேவை இனி தேவைப்படாததால் அவரது சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் பங்கு அவசியமில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஒரு மாதமே அரசினால் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அழகியவன்ன தெரிவித்தார்.
கொரோனா பிசிஆர் அன்டிஜென் பரிசோதனை, டெங்கு நுண்ணுயிர் பரிசோதனை மற்றும் தண்ணீர் போத்தல்கள் ஆகிய நான்கு கட்டுப்பாட்டு விலைகளே தற்போது அமுலில் உள்ளதாகவும் ஒரு கிலோ சீனி 150 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ சீனியின் விலை 138 ரூபாவாகவும், சில்லறை விலை 145 முதல் 150 ரூபாவாகவும் உள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.