இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7ம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த சூழலில், வடக்கு காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என பலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர். புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.
அல் அஹ்லி மருத்துவமனையில் நடந்த தாக்குதலை போன்று வேறு சம்பவம் நடந்து விடாமல் தடுக்கவும், அல்-குத்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க, அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில், சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் என அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.