ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் விடுதலை செய்துள்ளது.
இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
கட்டார் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.
விடுதலைசெய்யப்பட்ட பணயக்கைதிகள் இருவரையும் காசாவிலிருந்து இஸ்ரேலிற்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவியுள்ளது.