follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉள்நாடுஆசிரியர் அதிபர் தொழிற்சங்கத்தை மனோ கூட்டணி சந்தித்தது ஏன் ?

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கத்தை மனோ கூட்டணி சந்தித்தது ஏன் ?

Published on

கொழும்பில் அதிபா்கள் மற்றும் ஆசிரியர்களினால் எதிர்வரும் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இன்று (05) தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி., ஜமமு இரத்தினபுரி அமைப்பாளர் மற்றும் கூட்டணியின் ஆசிரியர் விவகார பொறுப்பாளர் சந்திரகுமார் ஆகியோருக்கும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றிய பிரதிநிதிகளான யல்வெல பஞ்சாசாகர தேரர், ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது, எதிர்வரும் 9ம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு தலைவர் மனோ கணேசன் எம்பி கோரியுள்ளார்.

இதன்போது இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்கிழமை நடத்தவிருக்கும் அடையாள தேசிய எதிர்ப்பு தினத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவை கோரினர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆசிரியர்களின் எதிர்வரும் நவம்பர் 9ம் திகதி செவ்வாய்கிழமை தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பிரதிநிதிகளுக்கு, இன்று தோட்ட தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் விரிவாக எடுத்து கூறினர்.

எதிர்காலத்தில்  தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளையும் பொது தேசிய தொழிற்சங்க வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள இது ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் என இரு தரப்பினரும் இணங்கியுள்ளனா்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய...

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க திட்டம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25...

தங்கள் வருமானம் மற்றும் செலவுகளை தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவினால் சிவப்பு சமிஞ்ஞை

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை காவல்துறையிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக...