எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும் மூன்று இலங்கையர்கள் போர்ச் சூழலுக்கு மத்தியில் எல்லையை கடந்து இஸ்ரேலுக்கு செல்ல முயன்ற அந்நாட்டு சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் சிக்கினர்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், அனைவருக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டாகும் எனவும் அது தவறான நடத்தை எனவும் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான யுத்த சூழ்நிலையில் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்டம் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் நிற்க மாட்டார்கள் என்றும் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.
இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது என அவர் குறிப்பிடுகின்றார்.