மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலக அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சாரதி பயிற்சி பாடசாலைகள் மற்றும் தரகர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 400 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அதிகாரி ஒரு சாரதி அனுமதி அட்டையை அச்சிடுவதற்கு தலா இரண்டாயிரம் ரூபாவை அறவிடுவதாகவும், இந்த கடத்தல் நாளாந்தம் இடம்பெறுவதாக பல குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பணி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்தில் இருந்து தற்போது இரண்டு இயந்திரங்களில் மட்டுமே அனுமதி அட்டைகள் அச்சிடப்படுவதால் நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடப்படுகின்றன. இதன் காரணமாக, ஒரு நாள் சேவைகளின் கீழ் அட்டைகள் அச்சிடுவதும் நாளொன்றுக்கு இருநூறு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
போதிய அட்டைகள் இல்லாத நிலையில், ஒன்பது இலட்சத்துக்கும் அதிகமான அட்டைகள் அச்சடிக்க வேண்டிய நிலையில், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பிரிவு (எச்) கவுன்டர் எண் 10 முதல் 12 வரை உள்ள அதிகாரி ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரம் பயிற்சி பாடசாலைகள் மற்றும் வெளி தரகர்களிடம் இருந்து தலா இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்க, அது அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரி பணம் பெற்றுக்கொண்டு நடத்தும் இந்த மோசடியை இந்த அலுவலகத்தின் சில உயர் அதிகாரிகளும் அறிந்திருப்பதாகவும், அவர் அனைவரையும் பணக்காரர்களாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னூறு முதல் நானூறு வரையிலான சாரதி அனுமதிப்பத்திரங்கள் மோசடியான முறையில் அவசர அவசரமாக அச்சிடப்பட்டமையினால் ஒருநாள் சேவை மற்றும் விசேட காரணங்களுக்காகச் செல்லும் மக்கள் மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
இந்த அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஆகியோரின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.