follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1பாடசாலைகளில் மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்

பாடசாலைகளில் மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்

Published on

2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப மாணவர்களை உள்ளடக்கும் வகையில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில் “உலகப் பாடசாலை உணவுத் திட்டத்தின்” முதலாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டில், 4.1 மில்லியன் மாணவர்களைக் கொண்ட முழு மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படும் என்றும், வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை 204 மில்லியன் டாலர்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி அடுத்த ஆண்டு அரச பாடசாலை சத்துணவு உதவி நிதியம் ஏற்படுத்தப்படும் என்றும், அது தொடர்பான சட்டத்தை அறிமுகம் செய்ய எடுக்கப்பட்ட கொள்கை முடிவை சட்ட வரைவுத் துறை ஏற்கனவே தயாரித்துள்ளது என்றார்.

உலக உணவுத் திட்டம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நிறுவனம் (USAID) மற்றும் உள்ளூர் வர்த்தகத் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவை இந்தப் பாடசாலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை வெளியிட நீதிமன்றம் தடையுத்தரவு

அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று...

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு...

தேர்தல்கள் ஆணைக்குழு நவம்பர் 27 கூடவுள்ளது

எதிர்வரும் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்...