follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் - பென்டகன்

சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் – பென்டகன்

Published on

அணு ஆயுதங்களை அதி விரைவாக பெருக்கிவரும் சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் கணித்துள்ளது.

இதுதொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், ‘2027ஆம் ஆண்டுக்குள், 700 அணு ஆயுதங்களை சீனா தயாராக வைத்திருக்கும். 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும். ஓராண்டுக்கு முன்பு கணித்ததைவிட 2.5 மடங்கு அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும்.

நிலம், கடல், காற்று ஆகியவைற்றை சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதிலும் அணு ஆயுத படைகளின் விரிவாக்கத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் சீனா முதலீடு செய்துவருகிறது.

அமெரிக்க, ரஷ்யா ஆகிய முன்னணி அணு ஆயுத நாடுகளை போன்று அணு ஆயுத முப்படைகளை சீனா கட்டமைத்துவருகிறது. அதாவது, நிலத்திலிருந்து பெரும் தொலைவிற்குப் பாயும் ஏவுகணைகள், வானிலிருந்து பாயும் ஏவுகணைகள், ஆழ்கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்துவருகிறது.

சீனாவின் அணு ஆயுத எதிரி நாடுகளில் முதன்மை நாடான அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் திறனை வளர்த்து கொள்ள அந்நாடு முயலவில்லை. ஆனால், மற்ற நாடுகள் தாக்கதல் நடத்தாதவாறும் அப்படி நடத்தப்பட்டால் பின் விளைவுகள் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்துதல் விடுப்பதற்காகவும் சீனா இப்படி செய்துவருகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இராணுவ வளர்ச்சி குறித்த அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத்துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், சீனாவின் இராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிடம் 200 அணு ஆயுதங்கள் தயாராக இருக்கிறது என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் பென்டகன் ஓராண்டுக்கு முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...