follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்

Published on

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை வாய்மொழியாக பெறும் செயற்பாடு நேற்று(18) முதல் இடம்பெறுகின்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முற்பகல் 9 மணிமுதல் இந்த செயற்பாடு ஆரம்பமானதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால், மின்கட்டணத்தை மீள மதிப்பிடுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் இதற்கான பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் குறித்த கடிதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யாதிருக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்...

பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக இன்றும்(18) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து...