follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றி

Published on

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் Glenn Phillips அதிகப்பட்சமாக 71 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் Tom Latham 68 ஓட்டங்களையும் Will Young 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Naveen-ul-Haq, Azmatullah Omarzai தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

இந்நிலையில் 289 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

அந்த அணி சார்பில் Rahmat Shah அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றதுடன் Ikram Alikhil ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Mitchell Santner மற்றும் Lockie Ferguson ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி நியூசிலாந்து அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியிலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் எம்.பியாக சுகத் வசந்த டி சில்வா தெரிவு

இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் சுகத் வசந்த...

அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் – நவம்பர் 21 பாராளுமன்றில் முன்வைப்பு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30...

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி,...