காஸா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே நொண்டிசாக்கையே தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் தூண்டுதல்கள் இருந்தால் கூட மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் இடம்பெற்ற சம்பவம் மீண்டும் நிகழ்கின்றது என்ற உணர்வை தவிர்க்க முடியாமல் உள்ளது
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறித்த பதிவில் வலியுறுத்தியள்ளார்.
A most despicable war crime! Even if there was provocation, hospitals cannot be touched. Cannot but have a sense of dejavu: 2009 SL military attack on #PTK hospital was sought to be justified by exactly the same lame and sick excuse! Attacks on civilians must stop 🛑 now! https://t.co/nLSFxPZ4g0
— M A Sumanthiran (@MASumanthiran) October 18, 2023