காஸா பகுதியிலுள்ள அல் அஹில் மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டு தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே தற்போது நடந்து வரும் போரில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் 3,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவை அனைத்தையும் படுகொலை என்று அழைக்கலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த போர் சூழ்நிலையை அமைதிப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை கூட்டுமாறும், இவர்களின் தலையீட்டில் இந்த பயங்கரவாதத்தையும் அரச பயங்கரவாதத்தையும் உடனடியாக நிறுத்தக் கோருவதற்கான பிரேரணையை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.