சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.