வெப்பமண்டல ஒன்றிணைப்பு மண்டலம் நாட்டின் காலநிலையை பாதித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் தாக்கம் காரணமாக நாட்டின் தற்போதைய மழை நிலைமையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மில்லிமீற்றர் 100க்கு மேல் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.