அரசாங்கத்துடனான முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்தில் இருந்து விலகும் அல்லது நீதியமைச்சர் பதவியை விட்டு விலகும் எண்ணம் தமக்கு இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் எடுக்கப்படும் சில தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுகின்ற போதிலும் எந்தவித முரண்பாடுகளும் இன்றி கலந்துரையாடல் மூலம் அப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் நாடாளுமன்றத்திலும் அரசாங்கத்திற்குள்ளும் கலந்துரையாடப்பட்டு நியாயமான முறையில் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்தது உட்பட நீதி அமைச்சரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.