இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களின் பின்னணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் பின்னணியில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் நடைபெற்றது.
பலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக போராட்டக்காரர்கள் இஸ்ரேலை விமர்சித்துள்ளனர்.
மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதற்கும் இங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்ரேலை ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வரும் பின்னணியில், பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நியூயார்க் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஒரு புரட்சி என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.