ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே வாரத்தில் ஏற்படும் 3வது நிலநடுக்கம் இதுவாகும்.
2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்தது.
கடந்த சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,445க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த பகுதிக்கு அருகாமையிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10,000 ஐ எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஹெராத் மாகாணத்தில் உள்ள 12 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,000 வீடுகளும் இடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.