தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பில் இருந்து பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதுவ சந்திப்பில் இருந்து வெளியேறுமாறும், மாத்தறையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இமதுவ சந்திப்பில் இருந்தும் வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.