follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி

Published on

அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் பைசர் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (FDA) அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது என்பதை இப்போது சுகாதார துறையின் அங்கமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) இயக்குனர் வைத்தியர் ரோச்செல்லி வாலன்ஸ்கை முறைப்படி பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்காவில் 2 கோடியே 80 இலட்சம் குழந்தைகள் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சவுதி அரேபியாவிலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...