follow the truth

follow the truth

November, 16, 2024
Homeஉள்நாடுகுழந்தைகள் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை நிறுத்தம்

குழந்தைகள் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை நிறுத்தம்

Published on

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களாக CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பான நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால் அதன் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதேவேளை, CT ஸ்கேன் இயந்திரத்தின் மின்கல அமைப்பிற்கு மாற்று முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, சில தினங்களில் இயந்திரத்தை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிய வழி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின்...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவி பெற இலங்கைக்கு அனுமதி

இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும்...

முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நாட்டின் பதில் பிரதம நீதியரசராக...