அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் புகைப் பரிசோனையை மேற்கொள்ள போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கான புகைப் பரிசோதனை மேற்கொள்ளாமையை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.