நாட்டில் மீண்டுமொரு மத மோதலைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான விதைகளை அரசாங்கம் விதைத்து வருவதாக விஜித ஹேரத் நேற்று (03) குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் உண்மையான பிரச்சினைகளை நசுக்கி கத்தோலிக்க பௌத்த மோதலை அல்லது பௌத்த-இஸ்லாமிய மோதலை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் மனங்களைக் குழப்பி சமூகத்தை இனவாத, மதவாதப் பிளவுகளாகப் பிரிக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், இனவாதப் பொறிகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஹேரத் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்து மீண்டும் ஒரு முரண்பாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.