follow the truth

follow the truth

March, 31, 2025
HomeTOP1கொழும்பில் மீண்டும் ISIS தாக்குதல் நடத்த திட்டம்

கொழும்பில் மீண்டும் ISIS தாக்குதல் நடத்த திட்டம்

Published on

கொழும்பில் பாராளுமன்றம், துறைமுக நகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பான உண்மைகளை தாம் கண்டுபிடித்துள்ளதாக நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம், உண்மைகளை அறிவித்துள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகளின் திட்டம் தொடர்பான உண்மைகளை அறிந்த பல்லேகல சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர், அது தொடர்பான குறிப்புகள் அடங்கிய கடிதத்தை தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எறிந்த போது இந்த திட்டம் தெரியவந்துள்ளது.

சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் கேட்ட இந்தக் கைதி, பின்னர் இந்தக் கைதியையும் தாக்கியுள்ளனர். பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட போது தான் அறிந்த அனைத்து தகவல்களையும் கொண்ட கடிதத்தை அவர் தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எழுதி எறிந்துள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரினர்.

குறித்த விடயத்தை பரிசீலித்த நீதவான், குறித்த அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...